துலாம் - வார பலன்கள்

Update: 2023-08-03 19:13 GMT

4.8.2023 முதல் 10.8.2023 வரை

எந்த காரியத்தையும் எளிதில் முடிக்கும் துலா ராசி அன்பர்களே!

புதன் பகல் 1.37 மணி முதல் வியாழக்கிழமை வரை சந்தி ராஷ்டமம் உள்ளதால் பயணங்களை தவிர்க்கவும். தீவிர முயற்சியுடன் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். திட்டமிட்ட பண வரவுகளும் தாமதித்தே வந்து சேரலாம். விடுமுறையில் உள்ள ஊழியர்களின் வேலையையும் சேர்த்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

சொந்தத்தொழில் செய்பவர்கள், நவீனக் கருவிகளின் உதவியுடன் வேலையை விரைவில் செய்து முடிக்கலாம். கூட்டுத் தொழிலில் வியாபாரம் வழக்கம் போல நடைபெறும். வாடிக்கையாளர்களிடம் உள்ள பணத்தை வசூலிக்கத் தகுந்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளை, பெண்களே சாமர்த்தியமாகச் சமாளித்துவிடுவர். கலைஞர்களின் வாய்ப்புகளுக்காக சகக்கலைஞர்கள் முயற்சிகளை மேற்கொள்வார்கள். பங்குச்சந்தை சுமாராக நடைபெறும்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சிவப்பு மலர் மாலை சூட்டி வழிபடுங்கள்.

மேலும் செய்திகள்