துலாம் - வார பலன்கள்

Update:2023-07-28 01:08 IST

சிந்தனை மிகுந்து காணப்படும் துலாம் ராசி அன்பர்களே!

திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். யாருக்கும், எதற்காகவும் வாக்கு கொடுக்க வேண்டாம். உத்தியோகஸ்தர்கள் பொறுப்புகளில் கவனமாக நடந்துகொள்ளுங்கள். புதிய நபர்களிடம் அலுவலக விஷயங்களைப் பற்றி பேசாதீர்கள். சொந்தத் தொழிலில் உள்ளவர்கள், பணியாளர்களின் பணிகளை அவ்வப்போது கண்காணிப்பது நல்லது. பணம் புழங்கும் இடங்களில் நம்பிக்கைக்கு உரியவர்களை அமர்த்துங்கள். கூட்டுத்தொழிலில் உள்ளவர்கள், மூலப் பொருட்களை அதிகமாக சேர்த்துவைப்பதை தவிர்ப்பது நல்லது. தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம்இருந்தால் அதனைத் தள்ளிப் போடுங்கள். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும், குதூகலத்திற்குக் குறைவிருக்காது. கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களால் மகிழ்ச்சி அடைந்தாலும் எதிர்பார்க்கும் ஆதாயம் இருக்காது.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காலையில் சூரியனையும், மாலையில் நவக்கிரகத்தையும் வணங்குங்கள்.

மேலும் செய்திகள்