துலாம் - வார பலன்கள்

Update:2023-07-14 01:28 IST

நினைத்ததை நினைத்தபடி செய்யும் துலா ராசி அன்பர்களே!

வெள்ளி முதல் சனி பகல் 1.29 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், நெருங்கியவர்களாக இருந்தாலும் ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். உறவுகளுடன் மனக்கசப்பை சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமாக இருப்பதோடு பதிவேடுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது அவசியம். சக ஊழியர்கள் எதிர்பார்த்த ஒத்துழைப்பு தரமாட்டார்கள். அனைவரிடமும் கனிவாக நடந்து கொள்ளுங்கள். சொந்தத் தொழிலில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வாடிக்கையாளர்கள் முழு திருப்தி அடைவர். கூட்டுத்தொழில் சிறப்பாக நடைபெறும். எதிர்பார்க்கும் லாபம் இருக்கும். குடும்பம் சீராக நடைபெற்றாலும், இடையிடையே சிறுசிறு தொல்லைகள் ஏற்படத்தான் செய்யும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளில் மகிழ்வுடன் பணிபுரிவர். பங்குச்சந்தை வியாபாரத்தில் லாபம் சேரும்.

பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை அங்காரகனுக்கு அரளிப்பூ மாலை சூட்டி, நெய் தீபமிட்டு வணங்குங்கள்.

மேலும் செய்திகள்