மலர்ந்த முகத்துடன் பணியாற்றும் சிம்ம ராசி அன்பர்களே!
உற்சாகத்துடன் வேலைகளில் ஈடுபட்டு வெற்றிகரமான பலன்களைப் பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள், சக ஊழியர்களின் உதவியுடன் முக்கிய வேலையைச் செய்து கொடுத்து உயரதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள்.
சொந்தத் தொழிலில் அதிக லாபமுள்ள பணிகள் வந்து சேரும். குறைந்த காலத்தில் பணி செய்து கூடுதல் வருமானத்தைப் பெறுவீர்கள். குடும்பத்துக்குத் தேவையானவற்றை வாங்குவீர்கள். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கக் கூடும். குடும்பம் சீராக நடைபெற்று வரும். உறவினர் இல்லத்து நிகழ்வுகளில் பெண்கள் பங்கேற்பர். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகலாம்.
பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு கொண்டைக் கடலை மாலை சூட்டி வழிபட்டு வாருங்கள்.