05.05.2024 முதல் 11.5.2024 வரை
உங்கள் உடமைகள் மீது கவனம் இருக்கட்டும் திருடு போக வாய்ப்புகள் உண்டு. உணவகங்களில் சமையல் பணியாற்றுவோர் சற்று ஜாக்கிரதையுடன் செயல்படுங்கள். வீண் கவலை சிலரை கவர் சூழ்ந்து கொள்ளும் எதிரிகளால் தொல்லை வந்து சேரும். இந்த வாரம் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் வீண் விரையங்களும் கவலைகளும் உண்டாகாது. சிலர் அரசாங்க ரீதியிலான கோபத்திற்கு ஆளாவீர்கள். எனவே அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நீங்கள் செயலாற்றுங்கள். உறக்க வாரத்தின் முற்பகுதியில் புதிய திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களை தவிர்த்து விடுங்கள் பெண்கள் தெய்வ வழிபாட்டின் வாயிலாக அமைதி காண்பீர்கள்.