உயர்வான எண்ணம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!
உத்தியோகஸ்தர்கள் புதிய முயற்சி களைச் சிறிது காலம் தள்ளிவைப்பதே உகந்தது. சிறிய தவறும், பெரிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கலாம். பேச்சுகளால் பிரியமான நண்பர்களின் மனதைப் புண்படுத்தும்படி ஆகலாம். சொந்தத் தொழில் செய்பவர்கள், பெயரைப் பெருமைப்படுத்தும்படி முக்கிய வேலை ஒன்றை செய்து கொடுப்பீர்கள்.
கூட்டுத் தொழில் வியாபாரத்தில், முக்கிய திருப்பங்களால் லாபம் அதிகமாகும். மாற்றம் செய்த பணியாளர்களின் உழைப்பால் ஏற்றமான பலன்கள் ஏற்படலாம். குடும்பத்தில் பிரச்சினைகள் இருந்தாலும், குழப்பங்கள் ஏற்படாது. சமயோசிதமாகச் செயல்பட்டு சங்கடங்களை சரிசெய்வீர்கள். மங்கல வாழ்வை எதிர்நோக்கும் பெண்களுக்கு மாலை சூடும் முயற்சிகள் உருவாகும். கலைஞர்களின் கற்பனைகளுக்கு வடிகாலாக, வாய்ப்புகள் வந்துசேரும். கடினமான பணியில் கவனம் தேவை.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு செந்தாமரை மலர் சூட்டுங்கள்.