29.9.2023 முதல் 5.10.2023 வரை
கம்பீர தோற்றம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!
வெள்ளி, சனி ஆகிய இரண்டு தினங்கள் சந்திராஷ்டமம் உள்ளதால், பயணங்களை தவிர்க்கவும். நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றிகரமான பலன்களை அடைவீர்கள். வரவேண்டிய தன வரவுகள் தாமதமின்றி வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விடுமுறையில் சென்றுள்ள சகப் பணியாளரின் வேலையையும் சேர்த்து செய்ய வேண்டியதிருக்கும். சொந்தத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த வேலைகளை அவசரமாக முடிக்க வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். கூட்டுத்தொழிலில், வியாபாரம் நன்கு நடைபெறும். புதிய தொழில் செய்யும் எண்ணம் தலைதூக்கும். வியாபார ஸ்தலத்தை விரிவுபடுத்துவீர்கள். குடும்பத்தில் அமைதியான போக்கு காணப்படும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கலைஞர்கள் பெரிய நிறுவன ஒப்பந்தங்களால் சுறுசுறுப்பாக பணியாற்றுவர்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு செந்தாமரை மலர் மாலை சூட்டுங்கள்.