20-10-2023 முதல் 26-10-2023 வரை
பாசத்தோடு பழகும் சிம்ம ராசி அன்பர்களே!
திட்டமிட்ட காரியங்களில் தீவிர முயற்சியோடு வெற்றி பெறுவீர்கள். என்றாலும் வியாழக்கிழமை சந்திராஷ்டமம் உள்ளதால் முக்கியமான காரியங்கள் தள்ளிப்போகும். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு விரும்பிய இடமாற்றமும், சம்பள உயர்வும் கிடைக்கும். சக நண்பர் ஒருவரின் பணியையும், சேர்த்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அலுவலகத்தில் உள்ளவர்கள் பற்றி வீண் பேச்சுகளில் ஈடுபட்டு, உயர் அதிகாரிகளின் கண்டனத்தை சந்திப்பீர்கள். சொந்தத் தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமும், அவர்களால் அதிக வருமானமும் வந்துசேரும். கூட்டுத்தொழில் வியாபாரம் நன்கு நடைபெற்று எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீாகள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்து மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
சிறப்புப் பரிகாரம்:-இந்த வாரம் வெள்ளிக்கிழமை துர்க்கைக்கு சிவப்பு வண்ண மலர் மாலை சூட்டுங்கள்.