கம்பீரமான தோற்றம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!
உங்கள் முயற்சிகள் சிலவற்றில் முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். வெற்றிச் செய்திகள் வீடு தேடிவரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் பொறுப்பிலுள்ள பதிவேடுகளை கவனமாக வைத்துக் கொள்ளுங்கள். செய்யும் பணிகளில் ஏற்படும் தவறுகள் சிறியதாக இருந்தாலும், அவை உயர் அதிகாரிகளுக்கு பெரியதாக காட்சியளிக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள், புதிய வாடிக்கையாளர்களின் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். மூலப்பொருட்களை வாங்கி சேமித்துக் கொள்வீர்கள். கூட்டுத்தொழில் சுமாராக நடைபெற்றாலும், வழக்கமான லாபம் குறையாது. குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பெண்கள் தங்கள் சேமிப்பில் இருந்து சிறிய கடன்களை அடைத்துவிடுவர். கலைஞர்கள், புதிய பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவர். பங்குச்சந்தை லாபகரமாக அமையும்.
பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து நெய் தீபம் ஏற்றுங்கள்.