கவலைகளை மறைத்து வாழும் சிம்ம ராசி அன்பர்களே!
உங்கள் செயல்கள் பலவற்றில் தீவிரமாக முயன்று நல்ல பலன்களைப் பெறுவீர்கள். தளர்வடைந்த செயல்களுக்குத் தக்க நபர்களின் உதவியை நாடுவீர்கள். பணவரவுகள் சிறிது அலைச்சலுக்குப் பின் வந்துசேரும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வும், செல்வாக்கும் அதிகமாகலாம். உயரதிகாரிகளின் விருப்பப்படி தள்ளிவைத்த வேலையைச் செய்ய முற்படுவீர்கள்.
சொந்தத் தொழிலில் ஈடுபடுபவர்கள் குறித்த காலத்தில், நிறைவடைந்த பணிகளைக் கொடுத்துப் பாராட்டுப் பெறுவார்கள். கூட்டுத் தொழிலில் வழக்கமான லாபம் வந்துசேரும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது. பெண்கள் அடுப்படியில் பணியாற்றும் போது கவனம் தேவை. கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவர். பங்குச்சந்தை வியாபாரம் நன்றாக நடைபெறும்.
பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுங்கள்.