சிம்மம் - வார பலன்கள்

Update: 2023-03-23 19:53 GMT

பிறர் விருப்பத்தை நிறைவேற்றும் சிம்ம ராசி அன்பர்களே!

வியாபாரிகள் திருப்தியடையும் வகையில் வியாபாரம் நடைபெற்று வரும். என்றாலும் மூலப் பொருட்களை அளவுக்கு மேல் கொள்முதல் செய்வதைத் தவிர்ப்பது முக்கியமானது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலகம் தொடர்பான விஷயங்களில் திருப்திகரமான போக்கு தென்படும். தொழில் செய்பவர்கள் சில சங்கடங்களைச் சந்திக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள் மிகச் சுறுசுறுப்பாகப் பணியாற்ற வேண்டிய நிலை உருவாகும்.

கலைஞர்கள் கடுமையாக முயற்சித்தால் சில புதிய வாய்ப்புகள் தேடி வரும். பெண்களின் சிறப்பான நிர்வாகத்தால், குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். வேலைக்குப் போகும் பெண்கள், அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறும் வகையில் பணிகளில் அக்கறை செலுத்துவது அவசியம். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல் நீங்கும் நேரம் இது.

பரிகாரம்:- இந்த வாரம் நவக்கிரக சன்னிதியில் உள்ள நவக்கிரகங்களை துதி பாடல்கள் பாடி வழிபடுங்கள்.

மேலும் செய்திகள்