உற்சாகமாக காரியங்களைச் செய்யும் சிம்ம ராசி அன்பர்களே!
செவ்வாய் பகல் 12.29 மணி முதல் வியாழக்கிழமை மாலை 4.36 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், செய்யும் செயல்களில் கவனம் தேவை. நீண்ட காலமாக எண்ணியிருந்த செயல் ஒன்றினை முடிக்கக் காலம் கனிந்து வரும். பொருளா தார நிலை உயர்ந்து, வங்கி சேமிப்பில் தொகை அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும், எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கலாம். சொந்தத் தொழிலில் புதிய முறைகளைப் புகுத்தும் வழிமுறைகளை தெரிந்து கொள்வீர்கள். தொழில் ரீதியான முன்னேற்றத்திற்கு துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். கூட்டுத்தொழிலில் கூடுதலான ஆதாயம் கிடைக்கும்.
குடும்பத்தில் மனதுக்குப் பிடித்த சம்பவங்கள் நடைபெறும். திருமண வயதை எட்டிய சில பெண்களுக்கு, திருமண யோகம் வாய்க்கும். கலைஞர்களுக்கு, புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை, துர்க்கைக்கு தீபமிட்டு வழிபட்டால் நற்பலன்களைப் பெறலாம்.