சிம்மம் - வார பலன்கள்

Update: 2023-02-23 19:54 GMT

நேர்மையான குணம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!

எளிதில் வெற்றி கிடைக்கும் வாரம் இது. என்றாலும் வெள்ளிக்கிழமை காலை 8.51 மணி வரை சந்திராஷ்டம் உள்ளதால் செய்யும் பணிகளில் கவனமும், நிதானமும் அவசியம். உத்தியோகத்தில் சிலருக்கு, பணிபுரியும் இடத்திலேயே ஊதிய உயர்வுடன் பதவி உயர்வு கிடைக்கக்கூடும். சொந்தத் தொழில் செய்பவர்கள், சுறுசுறுப்பாக பணியாற்றுவார்கள். கூட்டுத்தொழிலில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அதிக லாபத்தால் புதிய கிளை தொடங்கும் எண்ணம் ஏற்படலாம். குடும்பம் சீராக நடைபெற்றாலும், குறைகளும் இருக்கத்தான் செய்யும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெண்களுக்கு புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். மங்கலகரமான பொருட்கள் வீடு தேடி வரும். கலைஞர்கள் வாழ்வில் நல்ல திருப்பம் ஏற்படும். நண்பர்களின் வருகையால் பங்குச்சந்தையில் முதலீடு பெருகும்.

பரிகாரம்:- வெள்ளிக்கிழமை அன்று, மகாலட்சுமியை வாசனை மலா்களால் அா்ச்சனை செய்து வழிபடுங்கள்.

மேலும் செய்திகள்