உறுதியோடு செயல்பட்டு உயர்ந்து நிற்கும் சிம்ம ராசி அன்பர்களே!
முயற்சியோடு செய்யும் காரியங்களில் நல்ல திருப்பங்களை எதிர்பார்க்கலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு தகுந்த சமயத்தில் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் முன்னேற்றமான மாற்றங்களைச் சந்திப்பார்கள். சிலருக்கு பதவியில் உயர்வும், பணியிட மாற்றமும் கிடைக்கும். சுயதொழில் நன்றாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பர். பணியாளர்களின் ஒத்துழைப்பினால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். உறவினர்களும், நண்பர்களும் உதவிக்கரம் நீட்டுவர். பெண்களுக்கு புதிய ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகள் கிடைத்து வெளியூர்களுக்குச் செல்ல நேரலாம். பங்குச்சந்தை வியாபாரம் பலன் தருவதாக அமையும்.
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு தீபமிட்டு வலம் வந்து வழிபாடு செய்வது மனோதிடத்தை அதிகரிக்கும்.