சிம்மம் - வார பலன்கள்

Update: 2022-10-20 19:56 GMT

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

முற்போக்கு சிந்தனை கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!

பேச்சுகளில் கவனம் தேவை. பிள்ளைகளின் காரணமாக அக்கம் பக்கத்தினருடன் சிறுசிறு சச்சரவு ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியரின் பணியையும் சேர்த்து செய்ய வேண்டியதிருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள், அதிக வேலைப்பளுவால் ஓய்வின்றி உழைப்பீர்கள். புதிய வாடிக்கையாளர்களால், தொழில் முன்னேற்றம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் பணவசதி பெருகும். மூலப் பொருட்களை வாங்கி சேமித்துக் கொள்வீர்கள். பங்குச்சந்தை வியாபாரம் சுமாரான லாபம் தரும். கலைஞர்கள், முயற்சியின் மூலம் கிடைத்த வாய்ப்புகளில் சுறுசுறுப்பாக பணியாற்றுவர். பொருள் வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சிறுசிறு தடைகள் வந்தாலும், சுப காரியங்கள் திட்டமிட்டபடி நடைபெறும். பணி களின் போது பெண்கள் கவனமாக இருப்பது அவசியம்.

பரிகாரம்: சனீஸ்வர பகவானுக்கு சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபட்டால் சங்கடங்கள் நீங்கும்.

மேலும் செய்திகள்