விலை உயர்ந்த பொருள் வாங்குவதையோ, மற்றவர்களுக்கு கடன் பெற்றுத் தருவதையோ தவிர்த்திடுங்கள். உத்தியோகத்தில் உயர் பதவிகள் தேடிவரும். தொழிலில் வேலைப்பளு காரணமாக ஓய்வின்றி உழைப்பீர்கள். குடும்பம் சிறப்பாக நடந்தாலும், சிறுசிறு குறைகளும் தலைகாட்டும். கடன் தொல்லையை நீக்க முயற்சிப்பீர்கள். இந்த வாரம் புதன் கிழமை, பெருமாளுக்கு துளசி மாலை சூட்டி வணங்குங்கள்.