நண்பர்களிடம் பாசத்துடன் பழகும் சிம்ம ராசி அன்பர்களே!
முக்கியமான காரியங்களை ஒத்திவைப்பது நல்லது. நீண்ட நாள் எதிர்பார்த்த நண்பரை சந்திக்க நேரும். சில விஷயங்களை மனம் விட்டு பேசுவதால் பழைய பகை மறையும். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு சம்பள உயர்வும், இடமாற்றமும் ஏற்படலாம். பணிகளில் கவனமாக இல்லாவிட்டால் உயர் அதிகாரியின் கோபப் பார்வைக்கு இலக்காக நேரிடும். சொந்தத்தொழில் நன்றாக நடைபெறும். பணவரவுகளில் தாமதம் ஏற்பட்டாலும் கைகளுக்கு வந்து சேர்ந்து விடும். கூட்டுத்தொழில் லாபகரமாக நடைபெறும். பணியாளர்கள் திருப்திகரமாக வேலை செய்வார்கள். குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு கடன் தொல்லைகளை சமாளிப்பீர்கள். சுபகாரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களின் மூலம் நல்ல வருவாய் பெறுவர். பங்குச்சந்தை வியாபாரம் லாபம் ஈட்டும்.
பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.