குழந்தை அழுகிறதா?? கவலையை விடுங்க!! கிரைப் வாட்டர் கொடுங்க!!!
இந்தியாவில் கடந்த 170 வருடமாக கிரைப் வாட்டர் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.;
ஒரு வீட்டில் ஒரு குழந்தை அழுகின்ற பட்சத்தில் அந்த வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவருமே பதட்டத்துக்கு உள்ளாவார்கள். அதுவும் குழந்தை திடீர் திடீரென்று வீறிட்டு அழும்பொழுது, அதற்கான காரணமும் தெரியாத போது, பதட்டம் இன்னும் அதிகரிக்கவே செய்யும். இப்படி ஒரு அனுபவம் பெரும்பாலான இளம் குழந்தைகள் இருக்கும் வீட்டில் நடக்கக்கூடிய ஒன்றே. இப்படி குழந்தை அழுவதற்கான காரணம் அதற்கு ஏற்படும் வயிற்று வலியே.
குழந்தைகளுக்கு ஏன் வயிற்று வலி ஏற்படுகிறது?
குழந்தைகளுக்கு செரிமான அமைப்பு முழுமையாக வளர்ச்சி அடையாததாலும், பாலூட்டும் போது தாய்ப்பாலுடன் காற்றை உறிஞ்சுவதாலும் வயிற்றில் வாயுத்தொல்லை ஏற்பட்டு வயிற்று உப்பசத்தினால் குழந்தை வீறிட்டு அழுகிறது.
வாயு தொல்லையினால் வயிற்றுவலி இருப்பதற்கான அறிகுறிகள்:
* திடீரென்று குழந்தை காரணம் இன்றி வீறிட்டு அழுவது,
* பசி இல்லாத நேரத்திலும் அல்லது டயப்பர் மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் இல்லாத நேரத்திலும் குழந்தை சினிங்கி கொண்டே இருப்பது
* குறிப்பிட்ட நேரங்களில் குழந்தை தொடர்ந்து அழுவது, அழும் போது முகம் சிவந்து உடல் வெளுத்து இருப்பது.
* குழந்தையின் கை, கால்கள் விறைப்பாகி முதுகை வளைத்துக் கொண்டு குழந்தை கையில் நிற்காமல் அழுவது.
(Source : Mayo Clinic)
இம்மாதிரி சமயங்களில் சமய சஞ்சீவினியாக குழந்தைகளின் வயிற்று வலியை போக்கி தாய்மார்களின் வயிற்றில் பால்வார்க்கும், கைவசம் அவசியம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய, ஒரு பாரம்பரிய பொருளாக இருந்து வருவதே கிரைப் வாட்டர்.
கிரைப்வாட்டர் என்றால் என்ன?
கிரைப் வாட்டர் என்பது இயற்கை உட்பொருட்களை கொண்ட ஒரு கலவை. தில் விதை எண்ணெய் என்று அழைக்கப்படும் சதகுப்பை எண்ணெய், சர்ஜி காக்ஷரா போன்ற மூலப்பொருட்கள் மற்றும் சில எளிமையான மூலிகைகளும் , மூலப்பொருட்களாலும் ஆன கலவை. இது குழந்தைகளின் வயிற்றுக்கு இதமானதாகவும், துரிதமாக வாயு தொல்லையை அகற்றக் கூடியதாகவும், ஜீரண சக்தியை மேம்படுத்தக் கூடியதாகவும் இருப்பதால் இதை கொடுத்த மாத்திரத்தில் குழந்தையின் அழுகை சட்டென நின்று விடுகிறது. குழந்தையின் வயிற்றில் இருக்கும் அமிலத்தை சமநிலை செய்வதற்கும் இது உபயோகப்படுகிறது.
கிரைப் வாட்டரின் வரலாறு
இந்தியாவில் கடந்த 170 வருடமாக கிரைப் வாட்டர் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முதலில் டிடிகே ஹெல்த் கேர் 1928 ஆம் ஆண்டு இந்த உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்து வந்தனர். பின்பு 1951 ஆம் வருடம் உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டரை இவர்களே உற்பத்தி செய்ய தொடங்கி சிறந்த முறையில் விற்பனை செய்து வருகின்றனர்
1970 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு இதைப் போன்ற இன்னும் பல வீட்டு உபயோக பொருட்களை தயார் செய்து தனக்கென்று ஒரு தனி இடத்தை உபயோகிப்பாளர் மத்தியில் தக்க வைத்துக் கொண்டுள்ளது டிடிகே. இந்த மருந்து தயாரிப்பு முறையில் புதிய தொழில்நுட்பங்களையும் முதன்மையான கண்டுபிடிப்புகளையும் கொண்டு பல பொருட்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது டிடிகே.
உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் பாதுகாப்பானதா?
உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டரில் இருக்கும் தில் விதை எண்ணெய் என்ற சதகுப்பை எண்ணெய், சர்ஜி காக்ஷரா போன்ற உட்பொருட்கள் குழந்தையின் மென்மையான வயிற்றுக்கு ஏற்றவையாக இருக்கிறது. ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்பட்ட உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் குழந்தைகளின் வயிற்று வலி அஜீரணம் வாயு மற்றும் அமிலத்தன்மையை சமன் செய்வது போன்ற எல்லாவற்றையும் செய்கிறது. இதனால் கடந்த பல தலைமுறைகளாக தாய்மார்களின் நம்பிக்கைக்கு உரிய ஒன்றாக உட்வேர்ட்ஸ் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டரில் ஆல்கஹால் சேர்க்கப்படுவதில்லை. ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்பட்ட இந்த கலவை பாதுகாப்பாக இருப்பதற்காக பிரேசர்வ்டிவ்ஸ் இருக்கிறது என்பது வாஸ்தவம் ஆனால் அவை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய மிகக் குறைந்த அளவில் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் பக்கவிளைவுகளும் ஏற்படாது. சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது.