21-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
லடாக்கில் உள்ள லே பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.32 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா
டி.எல்.எஸ் முறைப்படி 65 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி போட்டி வரும் 23ம் தேதி நடக்கிறது.
மத்திய பிரதேசம்: பால் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தின் நயாபுராவில் பால் கடையாக செயல்பட்டு வந்த வளாகத்தின் 2வது மாடியில் ஒரு குடும்பம் வசித்து வந்துள்ளனர். இன்று அதிகாலை 4.45 மணியளவில் எதிர்பாராத விதமாக அந்த வளாகத்தில் உள்ள பால் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வளாகத்தின் 2வது மாடியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
உத்தரபிரதேச அணிக்காக கேப்டனாக செயல்பட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது - ரிங்கு சிங்
கொல்கத்தா அணியின் கேப்டன் பதவி குறித்து நான் அதிகமாக சிந்திக்கவில்லை. இந்த சீசனிலும் கொல்கத்தா அணிக்காக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். அதே வேளையில் உத்தரபிரதேச அணிக்காக கேப்டனாக செயல்பட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ரிங்கு சிங் கூறினார்.
43 ஆண்டுகளில் முதல்முறை.. பிரதமர் மோடி இன்று குவைத் பயணம்
பிரதமர் நரேந்திர மோடி இன்று மற்றும் நாளை என இரண்டு நாள் பயணமாக, குவைத் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 43 ஆண்டுகளுக்குப் பிறகு வளைகுடா நாட்டிற்கு இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டம்
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், படிப்படியாக வலுவிழக்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளரை தாக்கிய வழக்கு - நடிகர் மோகன்பாபுவுக்கு ஜாமீன் மறுப்பு
பத்திரிகையாளரை தாக்கிய வழக்கில் நடிகர் மோகன்பாபுவுக்கு முன் ஜாமீன் வழங்க தெலுங்கானா ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.56,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.7,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.99-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஜெர்மனி: சந்தைக்குள் புகுந்த கார் மோதி 2 பேர் பலி
,கார் விபத்தை ஏற்படுத்திய சவுதி அரேபியாவை சேர்ந்த 50 வயதான டாக்டரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இது பயங்கரவாத தாக்குதல் என தகவல் வெளியாகி உள்ளது.