21-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

Update:2024-12-21 09:39 IST
Live Updates - Page 2
2024-12-21 12:42 GMT

பிரதமர் மோடியின் குவைத் பயணத்தின் ஒரு பகுதியாக, இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களை சந்தித்து அவர் பேசினார். அப்போது அவர்கள் கைகளில் இந்திய தேசிய கொடியுடன் பிரதமரை வரவேற்றனர். அவர்கள் பிரதமருக்கு இருகைகளை கூப்பி வணக்கம் தெரிவித்தனர். கடந்த 1981-ம் ஆண்டு கடைசியாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குவைத்துக்கு பயணம் மேற்கொண்டார். அவருக்கு அடுத்து பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த பயணத்தில், ராணுவம் மற்றும் பாதுகாப்பில் ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

2024-12-21 12:29 GMT

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது.

இது கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 8.30 மணியளவில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், விசாகபட்டினத்திற்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 430 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவிலும், கோபல்பூருக்கு (ஒடிசா) தெற்கே 590 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது, அடுத்த 12 மணி நேரத்தில், கிழக்கு-வடகிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மெதுவாக நகர்ந்து, அதன் பிறகு, கடலில் படிப்படியாக வலுவிழக்கக்கூடும். இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது .

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கரூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

2024-12-21 11:11 GMT

குவைத் சென்றடைந்த பிரதமர் மோடியை, அந்நாட்டு விமான நிலையத்தில் துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு மந்திரியான ஷேக் பகத் யூசப் சவுத் அல்-சபா மற்றும் பலர் வரவேற்றனர்.

2024-12-21 10:24 GMT

இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகர் மீது ஏமன் நாட்டில் இருந்து நேற்றிரவு ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் நடத்தப்பட்டபோது, எச்சரிக்கைக்கான அபாய ஒலி எழுப்பப்பட்டது. இதனால், இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பு தேடி, பல்வேறு இடங்களுக்கும் சென்று தஞ்சமடைந்தனர். 

அப்போது 14 பேருக்கு லேசான அளவில் காயம் ஏற்பட்டது.  இந்நிலையில், ராக்கெட் தாக்கியதில் 16 பேருக்கு காயம் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்