பிரின்ஸ் ஜுவல்லரி வழங்கும் விழாக்கால சலுகை!
மணப்பெண்களுக்கான நகை வகை என்பது மணப்பெண்களை மட்டும் அல்லாமல் அனைத்து பெண்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.;
தென்னிந்திய அளவில் நம்பிக்கை, தரம் மற்றும் நேர்த்தியான கைவினைத்திறன் கொண்ட நகை வகைகளின் அடையாளமாக பிரின்ஸ் ஜுவல்லரி இருந்து வருகிறது. கடந்த 85 ஆண்டுகளுக்கு மேலாக வாடிக்கையாளர்களுக்கு பாரம்பரியமிக்க தனது சேவைகளையும் வழங்கி வருகிறது. பிரின்ஸ் ஜுவல்லரியின் புதுமையான வடிவமைப்பு கொண்ட நகைகள் மற்றும் அதன் ஒப்பற்ற வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றுடன், பல ஆண்டுகளாக காலாகாலத்திற்கும் நீடிக்கும் வகையிலும், நேர்த்தியாகவும், சிறப்பான வகையிலும் பாரம்பரிய நகைகளை தயாரித்து வழங்கி வருகிறது.
இந்த தைத்திருநாள் விழாக்காலத்தை கொண்டாடும் வகையில் பிரின்ஸ் ஜுவல்லரி பிரத்தியேகமான விழாக்கால சலுகைகள் மற்றும் புதிய நகைகளின் அணிவகுப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதன் மூலம் இந்த பொங்கல் விழாக்காலத்தை வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து விமரிசையாக கொண்டாடுகிறது.
தென்னிந்திய அளவில் ஜுவல்லரியில் நம்பகமான பெயரை பெற்றுள்ள பிரின்ஸ் ஜுவல்லரி இந்த பொங்கல் விழா காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இந்த தைப்பொங்கல் கொண்டாட்டங்கள் வாடிக்கையாளர்கள் மனதில் என்றும் நீங்காமல் இருக்கும் வகையில், அனைத்து தங்க நகைகள் வாங்கும் பொழுதும் அதன் மொத்த மதிப்பில் 6 சதவீதம் செய்கூலி மதிப்பு மட்டுமே (Value Addition - V.A) கணக்கிடப்படுகிறது. அத்துடன் சில குறிப்பிட்ட வகை நகைகளுக்கு செய்கூலி மற்றும் சேதாரம் ஆகியவை தள்ளுபடி செய்யப்படுகிறது.
இந்த பொங்கல் விழா காலத்தை வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் வகையில் பிரின்ஸ் ஜுவல்லரி தன்னுடைய புதிய முகூர்த்த நகை வகைகளை பெருமையுடன் அறிமுகப்படுத்தி இருக்கிறது. அசத்தும் பல்வேறு டிசைன்களை கொண்டதாகவும், விழாக்கால உணர்வை படம் பிடிக்கும் வகையிலும் அந்த டிசைன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் வாடிக்கையாளர்களுடைய மனம் கவரும் நகைகளின் வரிசையில் அவையும் ஒன்றாக மாறி இருக்கின்றன.
தென்னிந்திய ஆபரண பாரம்பரியத்திற்கு மதிப்பளிக்கும் விதத்தில் இந்த புதிய முகூர்த்த ஆபரணங்களின் தொகுப்பில் மிகவும் நுட்பமான கோவில் வடிவ டிசைன்கள், அதிரடி டிசைன்கள் கொண்ட நெக்லஸ் வகைகள், திருமணம் மற்றும் குடும்ப சுப நிகழ்ச்சிகள் மற்றும் தைப்பொங்கல் போன்ற திருவிழா நாட்களை சிறப்பிக்கும் வகையில் அணியக்கூடிய விதவிதமான தங்க ஆபரணங்கள் அவற்றில் அடங்கியுள்ளன.
பாரம்பரியமான வடிவமைப்போடும் மிக நேர்த்தியாகவும் உருவாக்கப்பட்ட மணப்பெண் நகை கலெக்ஷன் அல்லது குறிப்பிட்ட விழாக்கால ஆபரண வகைகளை போலவே இந்த முகூர்த்த நகைகளின் வரிசை அனைவர் மனைதையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மணப்பெண்களுக்கான நகை வகை என்பது மணப்பெண்களை மட்டும் அல்லாமல் அனைத்து பெண்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரின்ஸ் ஜுவல்லரி வழங்கும் இந்த புதிய அறிமுகம் குறித்து நிறுவனத்தின் இயக்குனர் திரு. ஜோசப் பிரின்ஸ் குறிப்பிடும் பொழுது, "எங்கள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் இந்த பொங்கல் திருவிழாவை சிறப்பிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் தென்னிந்தியக் கைவினைத் திறனை வெளிப்படுத்தும் வகையிலும், அதன் நீடித்த பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தங்க நகையின் ஒவ்வொரு பகுதியும் சமகால அழகை வெளிப்படுத்தும் விதத்திலும், மனம் கவரும் சிறந்த வடிவமைப்பை கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனித்துவமான ஆபரண வகைகளை பிரின்ஸ் ஜுவல்லரி வழங்குகிறது. அந்த வகையில் இந்த பொங்கல் திருவிழா நாட்களை அன்பு, பாரம்பரியம் மற்றும் அழகு ஆகிய அம்சங்களை வெளிப்படுத்தும் நகைகளின் தொகுப்பை வழங்குகிறோம். அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இந்த விழாக்காலத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றுவதை எங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்" என்று குறிப்பிட்டார்.
வாடிக்கையாளர்களுக்கு மேலும் சலுகைகளை வழங்கும் வகையில் பிரின்ஸ் ஜுவல்லரி கோல்டு எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் வழங்கி வருகிறது.
அந்த வகையில் வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள பழைய தங்க நகைகளை கொடுத்து பிரின்ஸ் ஜுவல்லரியின் புதிய 916 HUID ஹால்மார்க் தரம் பெற்ற தங்க நகைகளை வாங்கிச் செல்லலாம். அதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை நகை வாங்கும் பொழுதும் தரம் மற்றும் நம்பிக்கை ஆகியவை உறுதி செய்யப்படுகிறது.
விழாக்கால சலுகைகள் என்பது ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் மட்டுமே வழங்கப்படுகிறது. அதனால் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு பிரின்ஸ் ஜுவல்லரிக்கும் சென்று நகைகளை வாங்கும் பொழுது இந்த சலுகைகளை பெற முடியும்.
ஆகவே வாடிக்கையாளர்கள் இந்த விழா கால சலுகையை பயன்படுத்தி தங்கள் தங்க ஆபரண தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வரவேற்கப்படுகிறார்கள்.