டாட்டா ஐபிஎல் மேட்ச் ஜியோ சினிமாவில் பார்க்க... ஐந்து முக்கிய காரணங்கள்

இந்த ஆண்டு முதல் வாரத்தில் ஜியோ சினிமா வீடியோவை பார்த்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளின் பார்வையாளர்களின் மொத்த எண்ணிக்கையை விட அதிகம்;

Update:2023-04-08 12:12 IST

இந்தியாவின் மிக முக்கியவருடாந்திர விளையாட்டு திருவிழா டாட்டா ஐபிஎல், தற்போது தன்னுடைய உண்மையானதனித்துவத்துடன் உத்வேகத்துடன் நடப்பதால் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த ஆண்டு டாட்டா ஐபிஎல் மேட்ச்களை ஜியோ சினிமாவின் மூலம் டிஜிட்டல் தளத்தில் பார்க்கமுடியும் என்பது ரசிகர்களுக்கு மேலும் மகிழ்வை தருகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல்மேட்ச்கள் ஜியோ சினிமாவில் ஒளிபரப்பாவதில் முன்பிருந்த பல சாதனைகள்முறியடிக்கப்பட்டு வருகிறது. முதல் நாள் அன்று 147 கோடி மக்கள் ஐபிஎல் விளையாட்டை ஜியோ சினிமா இணையதளத்தில்பார்த்துள்ளனர் என்பது பெரும் சாதனை. இந்த ஆண்டு முதல் வாரத்தில் ஜியோ சினிமாவீடியோவை பார்த்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளின் பார்வையாளர்களின் மொத்தஎண்ணிக்கையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல ஐசிசி t20 வேர்ல்ட் கப் 2022 பார்வையாளர்களை விட கூடுதலாக தற்போது உள்ளது சிறப்பு.

இந்தியர்கள் டிஜிட்டல்தளத்தில் இந்த அளவிற்கு முக்கியத்துவம் ஏன் தருகின்றனர் என்பது உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கலாம் இதோ அதற்கானகாரணங்கள்.

1. முதல்முறையாக இந்தியர்கள் 4K தொழில்நுட்பத்தில் டாட்டா ஐபிஎல் மேட்சின் தரமான காணொளியைபார்க்கின்றனர். தாங்கள் வைத்திருக்கின்ற உபகரணங்களின் மூலம் ஜியோ சினிமா ஆப்பை எளிதாக பயன்படுத்த முடிகின்றது.

Full View

2. உயர் தொழில்நுட்பம்.

ஜியோ சினிமா, சமீபத்தில்நடைபெற்ற SA 20 & TATA WPL மாட்சுகளின்டீசர்களை தன உயர் தொழில்நுட்பத்துடன் வெளியிட்டுள்ளதேதற்போதைய டாட்டா ஐபிஎல் விளையாட்டை எவ்வளவு சிறப்பாக பார்க்க முடியும் என்பதைவெளிப்படுத்துகிறது.இந்த புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம் மிக நவீனத்துவம்வாய்ந்ததாகவும் குறிப்பாக தற்போது செயல்படுத்தப்படும், பிரபல ஹைப் தொழில்நுட்பம் பார்வையாளருக்கு பல வகையானவசதிகளை அளிக்கிறது. உதாரணமாக மேட்ச் நடந்து கொண்டிருக்கும்போது டீம் ஸ்கோர் ரேட்,பேட்ஸ்மேன் ஸ்கோரிங் ஏரியா, பவுலர் ஹிட் மேப், வேகன் வீல்ஸ் பின்தோரா மற்றும்மேலும் பல புள்ளி விவரங்களை விரல் நுனியில் பெற முடிகிறது. இதன் மூலம் ரசிகர்கள்ஒரு புதிய நவீன அனுபவத்தை (லீன் பேக் அண்ட் லீவ் ஃபார்வேர்ட்) பெறுகின்றனர்.

3. மல்டி கேம் தொழில்நுட்பம்.

விளையாட்டு நடக்கும்மைதானத்தில் பல கோணங்களில் கேமராக்களை வைத்து படம் எடுப்பார்கள். நமக்குஒளிபரப்பாகும் போது அங்கே ஒருவர் குறிப்பிட்ட சில கோணங்களை தேவைக்கேற்ப நேரடி ஒளிபரப்பில் ஒளிபரப்புவார்கள். நம்மால் அங்கே உள்ள எல்லா கேமராக்களின் ஒளிப்பதிவுகளையும்தேர்ந்தெடுத்து பார்க்க முடியாது. ஆனால் இப்போது ஜியோ சினிமாவில் நாம் மேட்ச்சைபார்க்கும் பொழுது மெயின் கேமராவில் ஒளிப்பதிவு ஆகுவதை பார்க்க வேண்டுமா அல்லதுகேபிள் கேமரா போர்டு ஹை கேமரா ஸ்டம்ப் கேமரா பேட்டர் கேமரா என எந்த கேமராவில் ஒளிப்பதிவாவதை பார்க்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். இதன்மூலம் உதாரணமாக சூரியகுமார் யாதவ் விளையாடும்போது 360 டிகிரியில் நாம் பார்க்க முடியும் எம்.எஸ்.தோனிஹெலிகாப்டர் ஷாட் அடிக்கும் போது முழுவதுமாய் கண்டு ரசிக்க முடியும். இந்த மல்டி கேம்தொழில்நுட்பம் ரசிகர்களுக்கு எதைப் பார்க்கலாம் எப்படி பார்க்கலாம் எந்த கோணத்தில்பார்க்கலாம் என்கின்ற சுதந்திரத்தை கொடுத்துள்ளது.

Full View

4. பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பு.

ஒவ்வொருவருக்கும் அவருடையதாய் மொழியில் விளையாட்டு திருவிழாவை கண்டு ரசிப்பது மகிழ்வை கொடுக்கும். அந்தவகையில் ஜியோ சினிமா, 12 மொழிகளில் டாடாஐபிஎல் ஐ ஒளிபரப்புகிறது. அவை முறையே ஆங்கிலம், ஹிந்தி, மராட்டி, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி, போஜ்புரி, தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் மற்றும் ஒடிசா.

டாட்டா ஐபிஎல் சாம்பியன்களான சுரேஷ் ரெய்னா, ரைஸ் கையாளி, ஏபிடி வில்லியர்ஸ், அணில் கும்ப்ளே,ரோபின் உத்தப்பா, ஆர்பி சிங், ஜாஹிர் கான்,, இயான்மார்கன் கிரமி ஸ்மித் மற்றும்ஸ்காட் ஸ்டைலிஷ் போன்றவர்களை தங்களுடைய ஆலோசகர் பேனலில் வைத்துள்ளனர்.

Full View

5. ஜியோ சினிமாவின் இத்தகையநவீன அற்புதமான தொழில்நுட்பத்துடன் டாடா ஐபிஎல் மேட்சை அனைவரும் கண்டு களிக்கலாம்.எந்தவித செலவு இல்லாமல் என்பதே இதன் முத்தாய்ப்பான சிறப்பம்சம். ஜியோ, ஏர்டெல், விஐ, பிஎஸ்என்எல் மற்றும் எல்லா வாடிக்கையாளர்களும் டாட்டாஐபிஎல் மேட்ச்சை அற்புதமாய் கண்டுகளிக்கவழி செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்