எதிர்காலத்திற்குரிய, கம்பீரமான ஆல் -நியூ ஹுண்டாய் வெர்னா அறிமுகம்! முன்பதிவுகள் இப்போது ஆரம்பம்!

ஆல் – நியூ ஹுண்டாய் வெர்னா காருக்கான முன்பதிவை வாடிக்கையாளர்கள் நாடெங்கிலும் உள்ள ஹுண்டாய் – ன் டீலர்ஷிப்களில் அல்லது (LINK) என்ற லிங்க் - ஐ க்ளிக் செய்வதன் மூலம் மேற்கொள்ளலாம்.;

Update:2023-02-24 10:00 IST
  • ரூ.25000 என்ற தொகையுடன் இந்தியாவில் ஆல் – நியூ ஹுண்டாய் காருக்கானமுன்பதிவுகளை HMIL தொடங்கியிருக்கிறது
  • ஆல் – நியூ ஹுண்டாய் வெர்னா காருக்கான முன்பதிவை வாடிக்கையாளர்கள் நாடெங்கிலும் உள்ள ஹுண்டாய் – ன் டீலர்ஷிப்களில் அல்லது (LINK) என்ற லிங்க் - ஐ க்ளிக் செய்வதன் மூலம் மேற்கொள்ளலாம்.

  • ஆல் – நியூ ஹுண்டாய் வெர்னா 4 பவர்டிரெயின் விருப்பத்தேர்வுகளில் வழங்கப்படும்.
  • இப்பிரிவில் மிக அற்புதமான செயல்திறனை வழங்குவதற்கென வடிவமைக்கப்பட்டிருக்கும்ஒரு புதிய, ஸ்போர்ட்டியான த்ரில்லிங்கான 1.5 டர்போ GDi பெட்ரோல் இன்ஜினையும் HMI அறிமுகம்செய்கிறது.
  • இந்த 1.5 டர்போ GDi பெட்ரோல் இன்ஜின் 6MT மற்றும் 7DCT உடன் வழங்கப்படுகின்றபோதுநிரூபணமான மற்றும் நம்பகமான 1.5 MPi பெட்ரோல்இன்ஜின் 6MT மற்றும் IVT உடன் கிடைக்கும்.
  • அனைத்து பவர்டிரெயின்களும் RDE – இணக்கநிலையும், சுற்றுச்சூழல் தோழமையும்கொண்ட இன்ஜின்களாகவும் மற்றும் E20 எரிபொருளைப் பயன்படுத்த ஏற்றவையாகவும் இருக்கின்றன
  • EX, S, SX மற்றும் SX(O) ஆகிய 4 வேரியண்ட்கள் தொகுப்பிலிருந்து தங்களுக்குவிருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.
  • அபிஸ் பிளாக் (புதிய), அட்லாஸ் ஒயிட் (புதிய), டெல்லூரியன் பிரவுன்(புதிய மற்றும் பிரத்யேக) என்ற 3 புதிய மோனோட்டோன் (ஒற்றை) வண்ணங்கள் உட்பட, 7 ஒற்றைவண்ணங்களிலும் மற்றும் 2 இரட்டை வண்ணங்களிலும், வெளிப்புற வண்ண விருப்பத்தேர்வுகளுடன்ஆல் – நியூ வெர்னா கிடைக்கிறது.

குருகிராம்: பிப்ரவரி13, 2023: தொடங்கப்பட்ட நாளிலிருந்து இந்தியாவின்மிகப்பெரிய கார் ஏற்றுமதி நிறுவனம் மற்றும் இந்நாட்டில் முதல் முறையாக ஸ்மார்ட் மொபிலிட்டிதீர்வுகள் வழங்குனர் என்ற புகழ்பெற்றிருக்கும் ஹுண்டாய் மோட்டார் இந்தியாலிமிடெட், ரூ.25,000 என்ற முன்பண தொகையை செலுத்துவதன் மூலம் ஆல் – நியூ ஹுண்டாய் வெர்னா காருக்கான முன்பதிவு செயல்திட்டத்தை இன்றுதொடங்கியிருக்கிறது. ஆல் – நியூ ஹுண்டாய் வெர்னா காருக்கான முன்பதிவை வாடிக்கையாளர்கள் நாடெங்கிலும்உள்ள ஹுண்டாய் – ன் டீலர்ஷிப்களில் அல்லது (LINK)என்ற லிங்க் - ஐ க்ளிக்செய்வதன் மூலம் மேற்கொள்ளலாம்.

ஆல் நியூ ஹுண்டாய் வெர்னா காருக்கானமுன்பதிவு திட்டம் தொடங்கியிருப்பது குறித்து ஹுண்டாய் மோட்டார் இந்தியாவின் தலைமைஇயக்க அதிகாரி (COO) திரு. தருண் கார்க் கூறியதாவது: "அடுத்த தலைமுறைக்கான எங்களதுமிகப்பிரபல செடான் கார் ஆல் நியூ ஹுண்டாய் வெர்னாவுக்கான முன்பதிவு திட்டம் தொடங்கப்படுவதைஅறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வலுவான ரசிகர்களை 16 ஆண்டுகளாக தக்கவைத்துக்கொண்டிருக்கும் வெர்னா, 4.6 இலட்சத்திற்கும் அதிகமான மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களைதன்வசம் வைத்திருக்கிறது. இப்போது இன்னும்உயர்வான செயல்திறனுடன் இதற்கு முன்பு ஒருபோதும் கண்டிராத த்ரில்லிங்கான டிரைவிங் அனுபவத்தைவழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களைப் பரவசப்படுத்த ஆல் – நியூ ஹுண்டாய் வெர்னா களமிறங்குகிறது. இந்த புதிய தர அளவுகோலை நிறுவியிருக்கும் ஹுண்டாயின்இந்த செடான், எமது வாடிக்கையாளர்களின் பெருவிருப்பங்களை நிஜமாக்கும் மற்றும் இப்பிரிவில்இன்னும் வலுவான உத்வேகம் உருவாவதற்கு வழிவகுக்கும்."

பெரும் உற்சாகமளிக்கும்டிரைவிங் அனுபவங்களை வழங்குவதற்காக நான்கு பவர் டிரெயின்களின் தொகுப்போடு ஆல் – நியூஹுண்டாய் வெர்னா உருவாக்கப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் (6MT) மற்றும் 7- ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (7DCT) என்பதோடு கிடைக்கும்1.5 டர்போ GDi என்ற புதிய ஸ்போர்ட்டியான, த்ரில்லிங்கான பெட்ரோல் இன்ஜின் ஆல் – நியூ ஹுண்டாய் வெர்னாவில் பொருத்தப்பட்டிருக்கிறது. இப்பிரிவில் ஒரு புதிய அளவுகோலை நிறுவும் வகையில்அதிகபட்ச ஆற்றல் மற்றும் இழுவை சக்தி (டார்க்) செயல்திறனை வழங்குவதற்கென இந்த பவர்டிரெயின்கள்வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. 6MT மற்றும் இன்டெலிஜென்ட் வேரியபிள் டிரான்ஸ்மிஷன் (IVT) என்றஅம்சங்களுடன் கிடைக்கும் நிரூபணமான மற்றும் நம்பகமான 1.5 MPi பெட்ரோல் இன்ஜின் விருப்பத்தேர்வையும்ஹுண்டாய் வழங்குகிறது. உயர்வான டிரைவிங் செயல்திறனின் மூலம் வாடிக்கையாளருக்குபெருமகிழ்ச்சி கிடைப்பதை இந்த பவர்டிரெயின்களின் தொகுப்பு உறுதிசெய்யும். மேலும், அனைத்து பவர்டிரெயின்களும் RDE – இணக்கநிலையும்,சுற்றுச்சூழல் தோழமையும் கொண்ட இன்ஜின்களாகவும் மற்றும் E20 எரிபொருளைப் பயன்படுத்தஏற்றவையாகவும் இருக்கின்றன.

EX, S, SX மற்றும்SX(O) ஆகிய 4 ட்ரிம் விருப்பத்தேர்வுகளில் வேரியண்ட்கள் தொகுப்பிலிருந்து தங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம். ஆல் – நியூ ஹுண்டாய் வெர்னாவை HMIL வழங்கும். மேம்படுத்தப்பட்டபாதுகாப்பு, சௌகரியம் மற்றும் வசதி ஆகியவற்றை வழங்குவதற்காக பல்வேறு சிறப்பு அம்சங்களைஉள்ளடக்கியதாக ஆல் – நியூ ஹுண்டாய் வெர்னாவடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், இப்பிரிவில் புதிய தரவுஅளவுகோல்கள் நிறுவப்படுவதை ஹுண்டாய் உறுதி செய்யும்.

HMILகுறித்து

ஹுண்டாய்மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) என்பது ஹுண்டாய் மோட்டார் கம்பெனிக்கு (HMC) முற்றிலும்சொந்தமான ஒரு துணை நிறுவனமாகும். இந்தியாவில் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே கார் ஏற்றுமதியில்முதலிடத்தை வகித்து வரும் ஹுண்டாய், இந்தியாவின் முதல் ஸ்மார்ட் மொபிலிட்டி தீர்வுகளைவழங்கும் நிறுவனமாகவும் திகழ்கிறது. தற்போது கிராண்டு i10 நியோஸ், ஆல் நியூ i20,i20 N Line, ஆரா, வென்யூ, ஸ்பிரிட்டட் நியூ வெர்னா, ஆல் நியூ கிரேட்டா, அல்கஸார், நியூடக்ஸன் மற்றும் ஆல் எலக்ட்ரிக் எஸ்யுவி ஐயோனிக் 5 என்ற 12 மாடல்களில் கார்களை தயாரித்து இது வழங்கி வருகிறது.சென்னை அருகே உள்ள HMIL-ன் ஒருங்கிணைந்த அதிநவீன தயாரிப்பு தொழிற்சாலையில் அதிநவீனஉற்பத்தி, தர மற்றும் பரிசோதனை வசதிகள் உள்ளன.

HMC-ன்உலக ஏற்றுமதி மையத்தின் முக்கிய அங்கமாக HMIL விளங்குகிறது. இது தற்போது ஆப்பிரிக்கா,மத்தியகிழக்கு, லத்தீன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆசியா பசிபிக் என ஏறக்குறைய85 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. தனது வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி திட்டங்களுக்குஉதவும் வகையில் HMIL -க்கு தற்போது இந்தியா முழுவதும் 583 டீலர்களும் மற்றும் 1492சேவை மையங்களும் உள்ளன. வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன உலக தொழில்நுட்பத்தை கொடுக்கவேண்டும் என்ற தனது உறுதிப்பாட்டில், ஹுண்டாய்-க்கு, ஒரு பல மில்லியன் டாலர் மதிப்புகொண்ட ஒரு R&D மையம், மோட்டார்வாகனப் பொறியியல் துறையில் உயர்நேர்த்தி மையமாக விளங்குவதற்குஉறுதிகொண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்