அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது

Update: 2022-09-08 11:56 GMT

Image Courtesy : Roland-Garros Twitter

நியூயார்க்.

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) கால் இறுதியில் அமெரிக்காவை சேர்ந்த 8-வது வரிசையில் உள்ள ஜெசிகா பெகுலாவை எதிர் கொண்டார். இதில் இகா 6-3, 7-6 (7-4) என்ற நேர்செட் கணக்கில் வென்று ஸ்வியாடெக் அரையிறுதிக்க்கு முன்னேறினார். நடப்பு பிரெஞ்சு ஓபன் சாம்பியனான அவர் முதல்முறையாக அமெரிக்க ஓபனில் அரை இறுதிக்கு தகுதி பெற்று உள்ளார்.

நாளை நடைபெறும் அரை இறுதி ஆட்டங்களில் ஒன்ஸ் ஜாபியுர் (துனிசியா)-கரோலின் கார்சியா (பிரான்ஸ்) , இகாஸ்வியா டெக்-ஷபலென்கா மோதுகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்