அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜானிக் சினெர் அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஜானிக் சினெர் (இத்தாலி ) - முன்னணி வீரர் மெத்வதேவ் (ரஷியா) ஆகியோர் மோதினர்.;

Update:2024-09-05 10:36 IST

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் 'நம்பர் ஒன்' வீரர் ஜானிக் சினெர் (இத்தாலி ) - முன்னணி வீரர் மெத்வதேவ் (ரஷியா) ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சினெர் 6-2,1-6, 6-1,6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்