ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; 2வது சுற்றுக்கு முன்னேறினார் கார்லஸ் அல்காரஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.;

Update:2025-01-14 04:29 IST

Image Courtesy: AFP

மெல்போர்ன்,

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து கொண்ட ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் ஷெவ்சென்கோ உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய அல்காரஸ் 6-1, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஷெவ்சென்கோவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்