ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: மிர்ரா ஆண்ட்ரீவா 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் இன்று தொடங்கி 26-ந் தேதி வரை நடக்கிறது.;

Update:2025-01-12 09:21 IST

மெல்போர்ன்,

டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன்படி இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் இன்று தொடங்கி 26-ந் தேதி வரை நடக்கிறது.

இன்று முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, செக் குடியரசின் மேரி பவுஸ்கோவா உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மிர்ரா ஆண்ட்ரீவா 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் மேரி பவுஸ்கோவாவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்