ஹாங்காங் ஓபன் டென்னிஸ்; சாம்பியன் பட்டம் வென்றார் முல்லர்
இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அலெக்ஸாண்ட்ரே முல்லர் - கீ நிஷிகோரி ஆகியோர் மோதினர்.;
ஹாங்காங்,
ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் காஸ்வே பேயில் உள்ள விக்டோரியா பார்க் டென்னிஸ் மையத்தில் நடைபெற்றது. இந்த தொடரில் பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் லீக், காலிறுதி, அரையிறுதி சுற்று ஆட்டங்களின் முடிவில் பிரான்சின் அலெக்ஸாண்ட்ரே முல்லர் மற்றும் ஜப்பானின் கீ நிஷிகோரி ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியின் முதல் செட்டை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் கீ நிஷிகோரி கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற அடுத்தடுத்த செட்களை 6-1, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் அலெக்ஸாண்ட்ரே முல்லர் கைப்பற்றினார்.
இதன் மூலம் 2-6, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கீ நிஷிகோரியை வீழ்த்தி அலெக்ஸாண்ட்ரே முல்லர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.