இண்டியன்வெல்ஸ் ஓபன்: கார்லஸ் அல்காரஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது.;

கோப்புப்படம்
கலிபோர்னியா,
இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) - பிரான்சிஸ்கோ செருண்டோலோ (அர்ஜெண்டினா) உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-3, 7-6(7-4) என்ற செட்கணக்கில் பிரான்சிஸ்கோ செருண்டோலோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் அல்காரஸ் கால் டிரேப்பர் (பிரிட்டன்) உடன் மோத உள்ளார்.