இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டேனியல் மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

மெத்வதேவ் அரையிறுதியில் ஹோல்கர் ரூனே உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.;

Update:2025-03-14 19:11 IST
இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டேனியல் மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

image courtesy:twitter/@BNPPARIBASOPEN

இண்டியன்வெல்ஸ்,

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் டேனியல் மெத்வதேவ், பிரெஞ்சு வீரரான ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார். இதில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை டேனியல் மெத்வதேவ் கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த ஆட்டத்தில் மெத்வதேவ் 6-4, 2-6 மற்றும் 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இவர் அரையிறுதியில் ஹோல்கர் ரூனே உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்