இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்; சாம்பியன் பட்டம் வென்றார் ஜேக் டிராப்பர்

இறுதிப்போட்டியில் பிரிட்டனின் ஜேக் டிராப்பர் மற்றும் டென்மார்க்கின் ஹோல்கர் ரூனே ஆகியோர் மோதினர்.;

Update:2025-03-17 05:24 IST
இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்; சாம்பியன் பட்டம் வென்றார் ஜேக் டிராப்பர்

Image Courtesy: @BNPPARIBASOPEN / X (Twitter) 

கலிபோர்னியா,

இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

இதில் பிரிட்டனின் ஜேக் டிராப்பர் மற்றும் டென்மார்க்கின் ஹோல்கர் ரூனே ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட டிராப்பர் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஹோல்கர் ரூனேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்