மியாமி ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், சின்னர் 3-வது சுற்றில் வெற்றி

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

Update: 2023-03-27 16:59 GMT

image courtesy: BNP Paribas open twitter via ANI

மியாமி,

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பியனுமான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 6-0, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் செர்பிய வீரர் டுசன் லஜோவிக்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பல்கேரிய வீரர் கிரிகோர் டிமிட்ரோவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்