மியாமி ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், கச்சனோவ் அரைஇறுதிக்கு முன்னேற்றம்

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

Update: 2023-03-31 19:33 GMT

image courtesy: Miami Open twitter

மியாமி,

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற கால்இறுதி போட்டி ஒன்றில் நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பியனுமான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிரிட்ஸ் உடன் மோதினார். இந்த போட்டியில் கார்லஸ் அல்காரஸ் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் டெய்லரை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு கால்இறுதி போட்டியில் அர்ஜென்டினா வீரர் பிரான்சிஸ்கோ செருண்டோலோ, ரஷிய வீரர் கரேன் கச்சனோவுடன் மோதினார். இந்த போட்டியில் கச்சனோவ் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் பிரான்சிஸ்கோவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்