மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக் இறுதிப் போட்டிக்கு தகுதி

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரை இறுதியில் ஸ்வியாடெக் (போலந்து)-குடெர்மெடோவா (ரஷியா) மோதினர்.

Update: 2023-05-05 11:52 GMT

Image Courtesy : AFP 

மாட்ரிட்,

மாட்ரிட் ஒபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரை இறுதியில் ஸ்வியாடெக் (போலந்து)-குடெர்மெடோவா (ரஷியா) மோதினர்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் , ஸ்வியாடெக் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பெலாரசின் சபலென்காவுடன் ஸ்வியாடெக் மோதுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்