மாட்ரிட் ஓபன் டென்னிஸ் - சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

அரையிறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, கிரேக்க வீராங்கனை மரியா சக்காரியுடன் மோதினார்.

Update: 2023-05-04 16:51 GMT

Image Courtesy : AFP 

ஸ்பெயின்,

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, கிரேக்க வீராங்கனை மரியா சக்காரியுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-4, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்