பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் காலிறுதி சுற்றில் வெற்றிபெற்றார்.

Update: 2023-06-06 22:28 GMT

பாரிஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில், நேற்று நடந்த காலிறுதி சுற்று போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் ரஷிய வீரர் கரன் ஹெச்நவ்வை எதிர்கொண்டார்.

3 மணி நேரம் 40 நிமிடம் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் ஹெச்நவ்வை 4-6,7-6, 6-4 என்ற செட்களில் வீழ்த்தி ஜோகோவிச் அபார வெற்றிபெற்றார்.

காலிறுதி சுற்றில் வெற்றிபெற்றதையடுத்து பிரெஞ்சு ஓபன் தொடரில் ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்