கொரோனா தொற்று பரவல்: உலக இறுதி சுற்று பேட்மிண்டன் சீனாவில் இருந்து தாய்லாந்துக்கு மாற்றம்

கொரோனா தொற்று பரவல் காரணமாகஉலக இறுதி சுற்று பேட்மிண்டன் சீனாவில் இருந்து தாய்லாந்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

Update: 2022-11-15 23:28 GMT

புதுடெல்லி,

மொத்தம் ரூ.12 கோடி பரிசுத்தொகைக்கான உலக டூர் இறுதி சுற்று பே்டமிண்டன் போட்டி அடுத்த மாதம் (டிசம்பர்) 14-ந்தேதி சீனாவின் குவாங்சோவ் நகரில் தொடங்க இருந்தது. இந்த போட்டியில் தரவரிசையில் டாப்-8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்பார்கள்.

இந்த நிலையில் சீனாவில் கொரோனா தொற்று பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த போட்டி அங்கிருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்குக்கு நேற்று மாற்றப்பட்டது. அதுமட்டுமின்றி ஒரு வாரத்துக்கு முன்பாக டிசம்பர் 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் எச்.எஸ்.பிரனாய் மட்டும் கலந்து கொள்கிறார்.

காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து போட்டிக்கு தகுதி பெற்றிருந்தாலும் இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஏற்கனவே விலகி விட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்