ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி

இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இகா ஸ்வியாடெக், எலெனாவுடன் மோதினார்.

Update: 2023-01-22 16:33 GMT

image courtesy: #AusOpen twitter

மெல்போர்ன்,

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபகினாவுடன் மோதினார். இந்த போட்டியில் எலெனா 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் இகாவை வீழ்த்தி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்

Tags:    

மேலும் செய்திகள்