ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : 2வது சுற்றுக்கு முன்னேறினார் ஆண்டி முர்ரே...!

முதல் சுற்றில் இங்கிலாந்து நாட்டின் முன்னணி வீரர் ஆண்டி முர்ரே, இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்னி ஆகியோர் மோதினர்.

Update: 2023-01-17 10:22 GMT

Image Courtesy : AFP 

மெல்போர்ன்,

ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என்று 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான 111-வது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று முதல் சுற்றில் இங்கிலாந்து நாட்டின் முன்னணி டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே, இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்னி ஆகியோர் மோதினர்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆண்டி முர்ரே 6-3, 6-3, 4-6, 6-7 ,7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்