டென்னிஸ்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுமித் நாகல் 7-6, 1-6, 2-6 என்ற செட் கணக்கில் முதல் நிலை வீரரான சீனாவின் ஜாங் ஜிசனிடம் போராடி தோல்வியடைந்தார்.
பதக்க பட்டியலில் 6-வது இடத்தில் இந்தியா..!
இன்று 5-வது நாளாக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்க பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.
துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. ஆடவர் ஷாட்கன் ஸ்கீட் இறுதிச் சுற்றில் இந்தியாவின் ஆனந்த் ஜீத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
வாள்வீச்சு: பெண்கள் எபி டீம் போட்டியில் இந்தியா 25-45 என்ற செட் கணக்கில் தென்கொரியாவிடம் தோல்வியடைந்தது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று இந்தியா 6 பதக்கங்களை (2 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம்) வென்றுள்ளது. இன்று 5-வது நாளாக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்க பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.
துப்பாக்கி சுடுதல்: ஈஷா சிங் வெள்ளி பதக்கம் வென்றார்
துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங் வெள்ளி பதக்கம் வென்றார். மனுபாக்கர் 5-வது இடத்தை பிடித்தார்.
பதக்க பட்டியலில் இந்தியா 6-வது இடம்
இன்று 5-வது நாளாக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்க பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.
வாள்வீச்சு போட்டி: இந்திய மகளிர் எபி அணி காலிறுதிக்கு முன்னேறியது
இந்திய மகளிர் எபி அணி 45-36 என்ற புள்ளிக்கணக்கில் ஜோர்டானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் தென்கொரியாவை எதிர்கொள்கிறது.
பெண்கள் ஆக்கி: இந்திய அணி முன்னிலை
பெண்கள் ஆக்கி: 1வது குரூப் ஸ்டேஜ் ஆட்டத்தில் இந்திய அணி சிங்கப்பூருக்கு எதிராக 8-0 என முன்னிலை வகித்து வருகிறது
படகு போட்டி: தமிழக வீரர் விஷ்ணு சரவணன் வெண்கலம் வென்றார்
படகு போட்டியில் (sailing) ஆண்களுக்கான ஐஎல்சிஏ 7 பிரிவில் இந்திய வீரர் விஷ்ணு சரவணன் வெண்கலப்பதக்கம் வென்றார். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.