துப்பாக்கிச்சுடுதல்: ஆண்கள் ஸ்கீட் அணி வெண்கலம் வென்றது
துப்பாக்கி சுடுதல் ஆண்கள் ஸ்கீட் அணியில் இந்திய அணி, ஆனந்த் ஜீத் சிங் நருகா, குர்ஜோத் சிங் கங்குரா மற்றும் அங்கத் வீர் சிங் பஜ்வா ஆகியோர் மொத்தம் 355 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றனர்.சீனா 362 புள்ளிகளுடன் தங்கமும், கத்தார் 359 புள்ளிகளுடன் வெள்ளியும் வென்றது.
இன்று 5-வது நாளாக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்க பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.
50மீ ரைபிள் 3 பொசிஷன் மகளிர் தனி நபர் இறுதிப்போட்டியில் சிஃப்ட் கௌர் சம்ரா 469.6 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். சீனா வீராங்கனை 462.3 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றார். இந்திய வீராங்கனை ஆஷி சோக்ஷிக் 451.9 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார்.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இன்று 5-வது நாளாக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்க பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.
துப்பாக்கிசுடுதலில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்
ஆசிய விளையாட்டு போட்டியில் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை சம்ரா தங்கம் வென்றார்.
ஸ்குவாஷ் மகளிர் அணி பிரிவு: இந்தியா தனது 2வது குரூப் ஸ்டேஜ் மோதலில் நேபாளத்தை 3-0 என்ற கேம் கணக்கில் வீழ்த்தியது. அனாஹத், ஜோஷ்னா மற்றும் தீபிகா ஆகியோர் அந்தந்த போட்டிகளை 3-0 என்ற கணக்கில் எளிதாக வென்றனர்.
நீச்சல்: 100 மீ பிரஸ்ட் ஸ்ட்ரோக் போட்டியில் 16 வயதான இந்திய இளம் வீராங்கனை லினிஷா 1:15.60 நேரத்தில் கடந்து 18-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அடைந்தார்.
50மீ ரைபிள் 3 பொசிஷன் பெண்கள் அணியில் சிஃப்ட் - ஆஷி ஆகியோர் இறுதிப்போட்டியில் விளையாடி வருகின்றனர். இதில் இவர்கள் தங்கம் வெல்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...
துப்பாக்கி சுடுதல்: பெண்களுக்கான 50மீ ரைபிள் 3பி தனிநபர் இறுதிப் போட்டி நடந்து வருகிறது. நீல் ஸ்டேஜ்ஜில் சிஃப்ட் கவுர் சாம்ரா 154.6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஆஷி 152.5 உடன் 6-வது இடத்தில் உள்ளார்.
25 மீட்டர் பிஸ்டல் ரேபிட் பிரிவில் இந்திய மகளிர் அணியினர் மனு பாக்கர், இஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகிய மூவரும் அணிகள் பிரிவில் 1759 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர்.
துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்
ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.