காமன்வெல்த் போட்டி: கலப்பு பேட்மிண்டனில் மலேசியாவின் கோ ஜின் வெய்யை வீழ்த்தினார் பி.வி.சிந்து

கலப்பு பேட்மிண்டன் இறுதி ஆட்டத்தில் மலேசியாவின் கோ ஜின் வெய்யை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

Update: 2022-08-02 18:50 GMT

பர்மிங்ஹாம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. இந்தியா இதுவரை 5 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.

இந்நிலையில் கலப்பு பேட்மிண்டன் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி சிங்கப்பூரை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் இந்திய அணி மலேசியாவை எதிர்த்து இன்று விளையாடி வருகிறது.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் மலேசியாவின் கோ ஜின் வெய்யை எதிர்த்து விளையாடிய பி.வி.சிந்து 22-20, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் இறிதிப்போட்டியில் இந்திய அணி 1-1 என மலேசியாவுடன் சமன் செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்