தேசிய சீனியர் ஆக்கி - வெற்றி பெற்ற ஒடிசா அணிக்கு கோப்பையை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்
ஒடிசா - அரியானா அணிகள் மோதிய தேசிய சீனியர் ஆக்கி இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது
சென்னை,
14-வது ஆக்கி இந்தியா தேசிய சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. 30 மாநில அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ஒடிசா - அரியானா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் ஒடிசா - அரியானா அணிகள் மோதிய இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஒடிசா அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது .
இந்த நிலையில், வெற்றி பெற்ற ஒடிசா அணிக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோப்பையை வழங்கினார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,
எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 14-வது தேசிய சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சி.
ஒடிசா அணிக்கு கோப்பையை வழங்கி சிறப்பான வெற்றிக்கு வாழ்த்துகளை தெரிவித்தேன். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திறமையான தலைமையின் கீழ் , திராவிட மாடல் அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக இந்த போட்டியை நடத்தியதில் தமிழ்நாடு பெருமை கொள்கிறது.
இந்த போட்டியில் திறமையை வெளிப்படுத்திய அனைத்து வீரர்களுக்கும், அணிகளுக்கும் எனது வாழ்த்துகள். என தெரிவித்துள்ளார் .