காமன்வெல்த் விளையாட்டு: இந்திய தடகள அணிக்கு 37 பேர் தேர்வு- பிரவீன், தனலட்சுமிக்கும் இடம்

காமன்வெல்த் விளையாட்டு போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடக்கிறது

Update: 2022-06-16 23:30 GMT

புதுடெல்லி,

காமன்வெல்த் விளையாட்டு போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய தடகள அணியை, தடகள சம்மேளன தலைவர் அடில் சுமரிவாலா நேற்று அறிவித்தார்.

ஒலிம்பிக் சாம்பியனான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தலைமையிலான அணியில் 37 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். ஆண்கள் பிரிவில் நீரஜ் சோப்ரா, அவினாஷ் சாப்ளே (3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ்), ஸ்ரீசங்கர் (நீளம் தாண்டுதல்), தமிழகத்தை சேர்ந்த பிரவீன் சித்ரவேல் (டிரிபிள் ஜம்ப்), ஆரோக்ய ராஜீவ், நாகநாதன் பாண்டி, ராஜேஷ் ரமேஷ் (400 மீட்டர் தொடர் ஓட்டம்) உள்பட 19 வீரர்களும், பெண்கள் பிரிவில் மன்பிரீத் கவுர் (குண்டு எறிதல்), சீமா அன்டில் (வட்டு எறிதல்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்), ஹிமா தாஸ், டுட்டீ சந்த் (100 மீட்டர் தொடர் ஓட்டம்), திருச்சியைச் சேர்ந்த எஸ்.தனலட்சுமி (100 மீட்டர் மற்றும் தொடர் ஓட்டம்) உள்பட 18 வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்