ஆசிய விளையாட்டு போட்டிகள்.. லைவ் அப்டேட்ஸ்

Update: 2023-09-19 10:32 GMT
Live Updates - Page 4
2023-09-20 10:12 GMT

ஆண்கள் ஒற்றையர் ஸ்கல்ஸ்

இந்திய வீரர் பால்ராஜ் பன்வார் 7 நிமிடம் 11.01 வினாடிகளில் இலக்கை எட்டி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

2023-09-20 10:07 GMT

ஆண்கள் இரட்டையர் முதல்நிலை போட்டி

இந்திய ஜோடியான பாபு லால் யாதவ் மற்றும் லேக் ராம் ஜோடி 6 நிமிடம், 42.59 வினாடிகளில் இலக்கை அடைந்து மூன்றாவது இடத்தைப் பிடித்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

2023-09-20 10:06 GMT

லைட்வெயிட் பெண்கள் இரட்டையர் ஸ்கல்ஸ்

இந்தியாவின் கிரண் மற்றும் அன்ஷிகா பார்தி ஆகியோர் இரண்டாவது சுற்று போட்டியில் 47:27.57 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து நான்காவது இடத்தைப் பிடித்தனர். மொத்தம் 5 அணிகள் பங்கேற்றன. இந்திய வீராங்கனைகள் இனி ரெபெசேஜ் சுற்றில் போட்டியிடுவார்கள்.

2023-09-20 10:05 GMT

இன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள்

படகோட்டுதல்

லைட்வெயிட் பெண்கள் இரட்டையர் ஸ்கல்ஸ் ஹீட்ஸ் - கிரண், அன்ஷிகா பாரதி

லைட்வெயிட் ஆண்கள் இரட்டையர் ஸ்கல்ஸ் ஹீட்ஸ்- அர்ஜுன் லால் ஜாட், அரவிந்த் சிங்

ஆண்கள் இரட்டையர் ஸ்கல்ஸ் ஹீட்ஸ்- சத்னம் சிங், பர்மிந்தர் சிங்

பெண்களுக்கான முதல்நிலைப் போட்டி - அஸ்வதி, ம்ருண்மயி நிலேஷ், பிரியா தேவி, ருக்மணி

ஆண்களுக்கான இரட்டையர் முதல்நிலை போட்டி - பாபு லால், லேக் ராம்

ஆண்கள் ஒற்றையர் ஸ்கல்ஸ் ஹீட்ஸ்- பால்ராஜ் பன்வார்

ஆண்கள் 4 பேர் பங்கேற்கும் ஹீட்ஸ்- ஜஸ்விந்தர் சிங், பீம் சிங், புனித் குமார், ஆஷிஷ்

ஆடவர் குவாட்ரபிள் ஸ்கல்ஸ் ஹீட்ஸ்- சத்னம் சிங், பர்மிந்தர் சிங், ஜாகர் கான், சுக்மீத் சிங்

மாடர்ன் பென்டத்லான்

ஃபென்சிங் தரவரிசை சுற்று - மயங்க் சாபேகர்

வாலிபால்

ஆண்கள் அணி - இந்தியா vs தென் கொரியா

2023-09-20 05:16 GMT

ஆசிய கோப்பை கைப்பந்து: இந்திய-தென்கொரியா அணிகள் இன்று மோதல்

ஆசிய விளையாட்டு சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. ஆனால் கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகள் மட்டும் நேற்று தொடங்கி விட்டன. இதில் கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் இடம் பெற்றுள்ள 19 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்குள் நுழையும். 

இதில் 'சி' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி, தனது முதலாவது லீக் ஆட்டத்தில் கம்போடியாவுடன் மோதியது. அபாரமாக ஆடிய இந்திய அணி 25-14, 25-13, 25-19 என்ற நேர்செட்டில் கம்போடியாவை துவம்சம் செய்தது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, தென்கொரியாவை (மாலை 4.30 மணி) சந்திக்கிறது. 

2023-09-20 05:12 GMT

ஆசிய விளையாட்டு; முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய வாலிபால் அணி..!!

ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23ம் தேதி தொடங்குகின்றன. ஆனால் துவக்க விழா நடைபெறுவதற்கு முன்னதாகவே கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் ஆரம்பமாகின்றன.

இதில் நேற்று நடைபெற்ற வாலிபால் போட்டி ஒன்றில் இந்தியா-கம்போடியா அணிகள் மோதின. இதில் ஆரம்பம் முதலே அற்புதமாக விளையாடிய இந்திய அணி முதல் 3 செட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 25-14, 25-13 மற்றும் 25-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஆசிய விளையாட்டு போட்டி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்து வைத்துள்ளது.

2023-09-19 13:41 GMT

இந்திய அணியை வீழ்த்தியது சீனா

ஆசியன் கேம்ஸ் கால்பந்து போட்டியில் இந்திய அணியை 5-1 என்ற செட் கணக்கில் சீன அணி வீழ்த்தியது. ஆட்டத்தின் முதல் பாதியில் 1-1 என சமநிலையில் இருந்த நிலையில் இரண்டாவது பாதியில் சீன அணி 4 கோல்களை அடித்து ஆதிக்கம் செலுத்தியது. இதனால், 5-1 என்ற கணக்கில் சீனா வென்றது.

சீன அணியில் கியான்லோங் டோ இரண்டு கோல்களையும் கோ தியான்யி, வெய்ஜூன் டேய், மற்றும் ஹாவோ பங் தலா ஒரு கோலும் அடித்தனர். இந்திய அணி தரப்பில் முதல் பாதியில் ராகுல் கேபி ஒரு கோல் மட்டும் அடித்தார்.

2023-09-19 13:30 GMT

இரண்டாவது பாதியில் சீன அணி இந்திய அணிக்கு எதிராக கோல் மழை பொழிந்து வருகிறது. அடுத்தடுத்து கோல்களாக அடித்து வருகிறது. இந்திய அணி ஒரு கோல் கூட அடிக்க தடுமாறி வரும் நிலையில், இரண்டாவது பாதியில் மட்டும் 4 கோல்களை அடித்துள்ளது. தற்போது சீனா 5-1 என முன்னிலை பெற்றுள்ளது.

2023-09-19 13:10 GMT

கோல் மழை பொழியும் சீனா

முதல் பாதியில் 1-1 என்ற சமநிலையில் இந்தியாவும் சீனாவும் இருந்த நிலையில், இரண்டாவது பாதியில் சீன வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சீனா அடுத்தடுத்து கோல்கள் அடித்து வரும் நிலையில் தற்போது 4-1 என முன்னிலை பெற்றுள்ளது. 

2023-09-19 13:05 GMT

ஆதிக்கம் செலுத்தும் சீனா

இரண்டாவது பாதியில் சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது மேலும் ஒரு கோலை அடித்துள்ள நிலையில் சீனா 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்