பல்கலைக்கழக ஆக்கி: எம்.ஓ.பி.வைஷ்ணவா அணி 'சாம்பியன்'

எம்.ஓ.பி.வைஷ்ணவா அணி எத்திராஜ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Update: 2022-11-10 21:21 GMT

சென்னை,

சென்னை பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையிலான பெண்கள் ஆக்கி போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் எம்.ஓ.பி.வைஷ்ணவா-எத்திராஜ் கல்லூரி அணிகள் மோதின. இதில் எம்.ஓ.பி.வைஷ்ணவா அணி 2-0 என்ற கோல் கணக்கில் எத்திராஜ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Tags:    

மேலும் செய்திகள்