ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி: 5வது முறையாக கோப்பையை வென்றது இந்தியா

இறுதி ஆட்டத்தில் இந்தியா - சீனா அணிகள் மோதின

Update: 2024-09-17 12:04 GMT

ஹூலுன்பியர் ,

6 அணிகள் இடையிலான 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்தது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் இந்திய அணி, 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை சாய்த்து 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

மற்றொரு அரையிறுதியில் சீனா, பாகிஸ்தானை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இதையடுத்து முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் சீனா 2-0 என்ற கணக்கில் மூன்று முறை சாம்பியனான பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது.

இந்நிலையில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா - சீனா அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தியது. இந்திய அணியின் ஜுக்ராஜ் சிங் ஆட்டத்தின் 50 நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து பதில் கோல் அடிக்க சீனா கடுமமையாக முயற்சித்தும் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Tags:    

மேலும் செய்திகள்