மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

சிறப்பாக விளையாடி இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது.

Update: 2024-12-12 22:00 GMT

மஸ்கட்,

9-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் 'ஏ' பிரிவில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை நேற்று சந்தித்தது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது

இதனால் ஆட்ட நேர முடிவில் 9-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது .இந்திய அணியில் தீபிகா 4 கோலும், கனிகா சிவாச் 3 கோலும் அடித்தனர். இதனால் 'ஏ' பிரிவில் 3 வெற்றியுடன் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது .

Tags:    

மேலும் செய்திகள்