ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி; அரையிறுதியில் இந்தியா-மலேசியா இன்று மோதல்

மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான்-ஜப்பான் அணிகள் மோத உள்ளன.

Update: 2024-12-02 22:14 GMT

Image Courtesy: @TheHockeyIndia

மஸ்கட்,

10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் இந்தியா, ஜப்பான், பாகிஸ்தான், மலேசியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. தென்கொரியா, தாய்லாந்து, சீன தைபே, வங்காளதேசம், சீனா, ஓமன் அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்தன.

இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெறுகிறது. அதில் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதியில் பாகிஸ்தான்-ஜப்பான் அணிகள் மோத உள்ளன. தொடர்ந்து இரவு 7 மணிக்கு நடைபெறும் 2-வது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, மலேசியாவுடன் மோதுகிறது.

லீககில் தங்களது 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடர ஆர்வம் காட்டும். அதேநேரத்தில் 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா கண்டுள்ள மலேசிய அணி இறுதிப்போட்டியை எட்ட கடுமையாக போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

Tags:    

மேலும் செய்திகள்