மகளிர் ஆசிய கோப்பையை வென்ற இந்திய ஆக்கி அணிக்கு பரிசுத்தொகைகள் அறிவிப்பு

8-வது மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

Update: 2024-11-21 03:30 GMT

image courtesy: twitter/@TheHockeyIndia

ராஜ்கிர்,

6 அணிகள் இடையிலான 8-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி சீனாவை எதிர்கொண்டது.

இதில் 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது.

இந்நிலையில் இந்திய ஆக்கி கூட்டமைப்பு பட்டம் வென்ற இந்திய அணியினருக்கு பரிசுத்தொகை அறிவித்துள்ளது. அதன்படி வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 லட்சமும், பயிற்சியாளர் உள்பட அணியின் உதவியாளர்களுக்கு தலா ரூ.1½ லட்சமும் பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது.

மேலும் பீகார் அரசும் இந்திய மகளிர் ஆக்கி அணிக்கு பரிசுத்தொகை அறிவித்துள்ளது. வீராங்கனைகளுக்கு தலா ரூ. 10 லட்சமும், தலைமை பயிற்சியாளருக்கு ரூ.10 லட்சம் மற்றும் உதவியாளர்களுக்கு தலா ரூ. 5 லட்சமும் பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்